தமிழாய்வுத்துறையின் பெண்கள் பிரிவின் சார்பாக 08.03.2024 அன்று மகளிர் விழா மற்றும் முக்கூடல் நிறைவு விழா நடைபெற்றது. பெண்கள் பிரிவின் அலுவலக கண்காணிப்பாளர் கு. சாஜிதா அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கடந்து வெற்றிப்பெற்று நிற்கும் பெண்களை மாணவிகளுக்கு எடுத்துக்காட்டி நாமும் வெற்றிப் பெற வேண்டும் என வாழ்த்துரைத்தார். மேலும் வேலைக்குச் செல்லும் பெண்களின் வாழ்வு சுகமா? சுமையா? என்ற தலைப்பில் பட்டிமன்றத்திற்கு கலைப்புல முதன்மையர் முனைவர் ஏ.மெஹதாப் ஷெரீப் அவர்கள் நடுவராகவும் சுகமே என்ற தலைப்பில் மாணவி கி.தாரணி மற்றும் பேராசிரியர் மு. அலிபிநிஷா அவர்களும் சுமையே என்ற தலைப்பில் மாணவி பா. யுவபாரதி மற்றும் பேராசிரியர் முனைவர் அ. ஜான்சிராணி அவர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவுச்செய்தார்கள். இறுதியாக நடுவர் அவர்கள் சுகமும் சுமையும் கலந்தது என்று கூறினார். 80 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.