25.09.2021 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் ஜமால் முகமது கல்லூரி, முதுகலைத் தமிழாய்வுத்துறையில் பாடத்திட்ட குழுக்கூட்டம் நடைபெற்றது. முதுகலைத் தமிழாய்வுத்துறைத் தலைவர் (பொ) முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துறைசார் வல்லுநர்களான முனைவர் மு.முகமது அப்துல் ரசாக், முனைவர் என்.அய்யப்பன், முனைவர் அ.கலீலுர் ரஹ்மான், முனைவர் செ.பாலு மற்றும் திருமிகு. ஜமால் முகமது ஆகியோர் இணையவழியிலும் துறையின் பாடத்திட்டக்குழு உறுப்பினர்கள் நேரடியாகவும் பங்கேற்றனர். பாடத்திட்டம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக துறைசார் வல்லுநர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.