தமிழ்த்துறை பெண்கள் பிரிவில் 05.10.2021 அன்று பிற்பகல் 02.15 மணியளவில் முக்கூடல் எனும் நிகழ்ச்சி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு உதவிப்பேராசிரியை முனைவர்.மு.ஹ.ஜஹானாரா அவர்கள் வரவேற்புரையாற்றினார். தன்னிதிப்பிரிவு பொருப்பாளர் முனைவர் க.இக்பால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முனைவர். பீ.ரசிதா பேகம் -இளந்தமிழா.! என்ற பொருண்மையிலும், பேரா.எஸ். கௌசியா சுல்தானா - பெரிய வீட்டுப் பெண் என்ற பொருண்மையிலும், முனைவர் அ.ஜனார்த்தலி பேகம் - ரங்கோன் ராதா என்ற பொருண்மையிலும் சிறப்புரையாற்றினார்கள். விழாவின் நிறைவாக முனைவர். சு.விஜயலெட்சுமி நன்றியுரை வழங்கினார்.