திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையில் எம்.சம்சுதீன் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் தமிழ்ப் படைப்பிலக்கியம் பன்முக நோக்கு நூல் வெளியீட்டு விழா 15.09.2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உருமு தனலெட்சுமி கல்லூரி முதல்வர் முனைவர் இ.ஆர்.இரவிச்சந்திரன் அவர்கள் இலக்கியங்களில் நவீனப் போக்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.