Department of Tamil

இணையவழி கவிதைப்போட்டி - பரிசளிப்பு

  • 3
  • 12
  • 2021

‘கோவிட் - 19” எனும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலில் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் அறிவுரைப்படி ‘பொது ஊரடங்கு நிலவும் இச்சூழலில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் பொருட்டும், திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரியின் முதுகலைத் தமிழாய்வுத்துறை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழிக் கவிதைப்போட்டி நடத்துவதென்று கடந்த மாதம் தீர்மானித்து அதற்கான முறையான அறிவிப்பு கல்லூரியின் முதல்வர் மற்றும் தமிழாய்வுத்துறைத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுடன் 18.05.2020 அன்று வெளியிடப்பட்டது. 18.05.2020 அன்று முதல் 01.06.2020 அன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கவிதைகளைப் புலனம் (Whatsapp) வழி அனுப்பினர். கல்லூரிகள் அளவில் 158 மாணவர்களும், பள்ளிகள் அளவில் 20 மாணவர்களும் கவிதைகளை அனுப்பிச் சிறப்பித்தனர். கவிதைகள் அனைத்திற்கும் மாற்று எண் (Dummy Number) வழங்கி அக்கவிதைகளை தமிழாய்வுத்துறையின் உதவிப்பேராசிரியர்கள் முனைவர் மு.ஹ.ஜஹானாரா, திரு. து.பிராபாகரன், திரு. நி.அமிருதீன் ஆகியோர் இரு மதிப்பீடுகள் செய்தனர், ஒருங்கிணைப்பாளர்கள் திரு.வீ.விஜய் மற்றும் திரு.மு.அப்துல் சமது ஆகியோர் நடுவர்களின் மதிப்பெண்களைப் பரிசீலித்து முடிவுகளை அறிவித்து அதனடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் முதல் மூன்று வெற்றியாளர்களைத்  தேரந்தெடுத்தனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் மின்சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது

Event Photo Gallery