Department of Tamil

எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் நூற்றாண்டு விழா - பன்னாட்டு ஆய்வரங்கம்

  • 3
  • 26
  • 2022

     பன்னூலறிஞர் எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் நூற்றாண்டை முன்னிட்டு ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறை இஸ்லாமிய இலக்கியக் கழகம், யுனிவர்ஷல் பப்ளிஷர்ஸ் இணைந்து 26.03.2022 சனிக்கிழமை அன்று ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டு ஆய்வரங்கம் நடத்தின. இந்நிகழ்வில் தொடக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சை.இஸ்மாயில் முகைதீன் அவர்கள் தலைமையேற்று தலைமையுரை நல்கினார். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளர் முனைவர் மு.இ.அகமது மரைக்காயர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் டாக்டர் அ.கா.காஜா நஜீமுதீன் அவர்களும் கல்லூரியின் பொருளாளர் ஹாஜி எம்.ஜே.ஜமால் முஹம்மது அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் கவியருவி தி.மு.அப்துல் காதர் அவர்கள் கருத்தரங்கத் தொடக்கவுரையில் பன்னூலறிஞர் எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார். தொடக்க விழா நன்றியுரையினை இஸ்லாமியத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் பன்னாட்டு ஆய்வரங்கின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் கா.முகமது இஸ்மாயில் அவர்கள் நவின்றார். இந்நிகழ்வினை துறையின் பேராசிரியர் முனைவர் க.சிராஜுதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

    தொடர்ந்து நிகழ்ந்த கருத்தரங்க அமர்வுகளுக்கு இஸ்லாமியத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் ஜெ.ராஜா முகமது, முதுகலைத் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன், திருவாடானை அரசுக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். அமர்வுத் தலைவர்களை முறையே தமிழாய்வுத் துறைப் பேராசிரியர்கள் க.இம்தாதுல்லாஹ், முனைவர் ஷே.நாகூர் கனி, முனைவர் த.செல்வராசு ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். அமர்வுகளில் 45 பேராளர்கள் தங்களின் ஆய்வுரையினை வழங்கினர். நிறைவு விழாவின் வரவேற்புரையினை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் மு.அப்துல் சமது அவர்கள் வழங்கினார். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் முனைவர் சேமுமு.முகமதலி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் உதவிச் செயலர் முனைவர் க.அப்துஸ் சமது அவர்களும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பெருந்தகை சி.நா.மீ.உபயதுல்லா அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்ற ‘அப்துற்-றஹீம் ஆய்வுச் சரத்தினை’ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் அவர்கள் வெளியிட முதற்படியினை சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆய்வுச் சரத்தினை வெளியிட்டு தேசியத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்; மொஹிதீன் அவர்கள் விழாப் பேருரையாற்றினார்.  நிறைவுவிழாவின் நன்றியுரையினை யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான் அவர்கள் நவின்றார், துறையின் பேராசிரியர் திரு.து.பிரபாகரன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் ஜமால் முகமது கல்லூரி மேனாள் மாணவர் சங்கம் திருச்சி கிளையின் செயலாளர் அல்ஹாஜ் எம்.முஹம்மது ஆரிஃப் அவர்களும் இணைச்செயலாளர் அல்ஹாஜ் எம்.சிராஜுதீன் அவர்களும் பங்கேற்றுச் சிறப்பு செய்தனர். கல்லூரியின் தமிழ்த்துறை, அரபித்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பு செய்தனர்.

Event Photo Gallery