Department of Tamil

மாநில சிறுபான்மை ஆணையம் - பேச்சுப்போட்டி

  • 3
  • 30
  • 2022

தமிழ்நாடு அரசு, சிறுபான்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள், மாவட்ட அளவில் திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் (தன்னாட்சி) ஒருங்கிணைப்பில் 30.03.2022 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்றது. போட்டிகளைத் திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவில், தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் .சையத் ஜாகீர் ஹசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் முனைவர் அருட்திரு இருதயம் மற்றும் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் திரு.வீ.விஜய், திரு.நி.அமிருதீன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தமிழ்ப்பேச்சுப்போட்டிகளில் 44 மாணவர்களும், ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் 23 மாணவர்களும் பங்கேற்றனர்.

     நிகழ்வில் பேச்சுப்போட்டியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் .சையத் ஜாகீர் ஹசன் வரவேற்றுப் பேசினார். முதல்வர் முனைவர். சை.இஸ்மாயில் முகைதீன் அவர்கள் விழா தலைமையுரையாற்றினார்.  திருச்சிராப்பள்ளி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமிகு. .இனிகோ இருதயராஜ் அவர்கள் போட்டிகளைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். பேச்சுப்போட்டிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஜெ.ஹாஜாகனி அவர்கள் விழாவின் நோக்குவுரையாற்றினார். பாத்திமா மருத்துவமனை மருத்துவர் எஸ்.ரொஹையா அவர்களும், திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்டச் செயலாளர் திரு.வைரமணி அவர்களும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் முனைவர் அருட்திரு இருதயம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். மேலும் விழாவில் கல்லூரியின் செயலர் & தாளாளர் டாக்டர்; .கா.காஜா நஜிமுதீன், மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்ப்பேச்சுப் போட்டிகள் ஹுசைனுதீன் குளிர்மையரங்கிலும், ஆங்கிலப்பேச்சுப் போட்டிகள் காஜாமியான் குளிர்மையரங்கிலும் நடைபெற்றன.

     தமிழ்ப் பேச்சுப்போட்டியின் நடுவர்களாக அதிராம்பட்டினம், காதர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்  திரு. சையது அகமது கபீர், ஜமால் முகமது கல்லூரி தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் திரு.து.பிரபாகரன், மேனாள் புள்ளியியல் துறை துணை இயக்குநர் முனைவர் பி.கலைமணி ஆகியோரும், ஆங்கிலப் பேச்சுப்போட்டியின் நடுவர்களாகப் பிஷப் ஹீபர் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.அசாரியா கிருபாகரன் மற்றும் ஜமால் முகமது கல்லூரி ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் ஒய். பர்வேஸ் ஷெரீப் ஆகியோரும் பங்கேற்றனர்.

Event Photo Gallery