NATIONAL SERVICE SCHEME

நவல்பட்டு கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம்

  • 2
  • 21
  • 2020

ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நவல்பட்டு கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம்

      திருச்சிராபள்ளி, ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நவல்பட்டு, போலீஸ் காலனி, பர்மா காலனி, சோழமாதேவி மற்றும் அண்ணாநகர் ஆகிய  கிராமங்களில் ஏழு நாள் சிறப்பு முகாம் 09.02.2020 முதல் 15.02.2020 வரை நடைபெற்றது. இம்முகாமில் தினமும் அதிகாலை மாணவர்களின் உடற்பயிற்சி அதனை தொடர்ந்து மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்வியல் சிந்தனைகள் மாணவர்களுக்கு நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர்    M.அன்வர் சாதிக் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை மேற்குறிப்பிட்ட ஐந்து கிராமங்களில் உள்ள கோவில்கள், மசூதிகள், ஆலயங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பூங்காக்கள், அரசு பள்ளிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் கடை வீதிகள் ஆகியவைகள் மாணவர்களால் தூய்மைப்படுத்தப்பட்டது. மாலையில் சிறப்பு விருந்தினர்களால் தொழில் முனைவோர் ஆவது எப்படி?, புதியதோர் உலகம் செய்வோம், வாழ்வியல் திறன்கள், நீர் மேலாண்மை, மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், மனிதவள மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றி மாணவர்கள் ஆற்றுப்படுத்தபட்டனர்.

      பர்மா காலனியில், தூய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்தும் விதமாக தனிநபர் கழிவறை விழிப்புணர்வு மற்றும் கணக்கெடுப்பு மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இம்முகாமில் ஜோசப் கண் மருத்துவமனையோடு இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமும், காவேரி மருத்துவமனையோடு இணைந்து பொது மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

      கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் முனைவர். A.K. காஜா நஜீமுதீன் சாஹிப் அவர்கள், பொருளாளர் ஹாஜி M.J. ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள், உதவி செயலர் முனைவர் K. அப்துல் சமது அவர்கள், முதல்வர் முனைவர்                     S. இஸ்மாயில் முகைதீன் அவர்கள், துணை முதல்வர் முனைவர் A. முஹம்மது இப்ராஹீம் அவர்கள், கூடுதல் துணை முதல்வர் முனைவர். M. முஹம்மது சிகாபுதீன் அவர்கள், சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் K.N. அப்துல் காதர் நிஹால் அவர்கள், விடுதி இயக்குநர் முனைவர் K.N.முஹம்மது ஃபாஜில் அவர்கள், பகுதி ஐந்து ஒருங்கிணைப்பாளர் மேஜர் N. அப்துல் அலி அவர்கள், நவல்பட்டு கிராம ஊராட்சி மன்றத்தலைவர் திரு. அன்னை A. ஜேம்ஸ் மற்றும் சோழமாதேவி  கிராம ஊராட்சி

Department Gallery